செக்ஸ் உறவின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்
இருவரும்
நன்றாக ஒருவரையொருவர் செக்ஸ் உறவு கொள்வது என்பதே ஒரு ஜாலியான விளையாட்டு. அந்த
நேரத்தில் கட்டுக்கோப்பாக, கட்டுப்பாட்டோடு இருப்பதை
முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
சுதந்திரமாக
உங்களது உணர்வுகளை வெளியே போக அனுமதியுங்கள். உணர்வுகள் துள்ளிக்குதித்து
விளையாடட்டும், எப்படிப் போக நினைக்கிறதோ அப்படியே போகட்டும், தடுக்க
முயலாதீர்கள்.
செக்ஸ்
உறவின் போது எப்படி நடந்து கொண்டால் உணர்ச்சிகளை முழுமையாக அனுபவிக்கலாம்
என்பதற்கு ஏகப்பட்ட குறிப்புகள் இருக்கிறது. அதில் சிலவற்றை பயன்படுத்தினாலே
கூட போதும், உச்சகட்ட நிலையை நீங்கள் தொட்டுப் பார்க்க முடியும்.
அதற்காக புத்தகங்களைப் படித்து, இணையதளத்தில் பார்த்து , வீடியோவில்
பார்த்துத்தான் இவற்றை கற்றுக் கொள்ள முடியும் என்றில்லை. எல்லாம்
அனுபவத்தில் வருவதுதான். நமக்குள்ளாகவே இருக்கும் கற்பனைக் திறனை லேசாக
தட்டி விட்டால் கூட போதும், சொர்கம் உங்கள் வசம்.
படுக்கைக்குப் போவதற்கு முன்பு இதை மட்டும் மனசுல வச்சுக்குங்க, போதும்...
நல்ல
ரொமான்டிக் மூடோடு 'வேலை'யை ஆரம்பிக்க முயலுங்கள். எந்தவிதமான இடையூறும்
இல்லாத வகையில் உறவுக்கான சூழல் இருக்கிறதா என்பதை உறுதி செய்து
கொள்ளுங்கள். உங்களின் உற்சாக உறவுக்கு சிறு சத்தம் கூட இடைஞ்சலாக இருக்கக்
கூடாது. அந்த அளவுக்கு இருப்பது நல்லது.
அப்புறம்,
திசை திருப்பும் வகையிலான விஷயங்களை ஏறக் கட்டுங்கள். இரவு விளக்கு வெளிச்சம் அதிகம் இருந்தால் உடனே அதை ஆப் செய்து விடுங்கள், இல்லாவிட்டால் குறைவாக வெளிச்சம் வரும் பல்புகளை வாங்கி மாட்டுங்கள். செல்போனை ஆப் செய்து விடுங்கள், பாட்டுக் கேட்கப் பிடித்தால் - இருவரும்
விரும்பினால் மட்டும் .
இப்படி ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து சரியாக இருப்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் வேலையைத் தொடங்குங்கள்.
முதலில்
சின்னதாக விளையாட்டு, சில்மிஷங்கள், சிலிர்ப்பூட்டும் சில சேஷ்டைகள் என தொடங்குங்கள்.. அப்படியே ஒவ்வொன்றாக தொடங்கி உச்சத்துக்குச்
செல்லுங்கள்.
செக்ஸ்
உறவின்போது சிலருக்கு ஏதாவது பேச வேண்டும் போலத் தோன்றும். குறிப்பாக
சத்தம் போட்டு எதையாவது பேச வேண்டும் போல வேகமாக இருக்கும். சிலருக்கு
வாயில் வருவதையெல்லாம் பேசத் தோன்றும், பேசவும் செய்வார்கள். அப்படித்
தோன்றும்போது தயவு செய்து கட்டுப்படுத்தாதீர்கள். கத்த வேண்டும் போல
தோன்றுகிறதா கத்துங்கள், ஏதாவது பேச வேண்டும் போல இருக்கிறதா, பேசி
விடுங்கள்.
முடிந்தால்
உங்களது மூடுக்கு உங்களது பார்ட்னரையும் இழுத்து வாருங்கள். இருவரும்
சேர்ந்து ஒரே மூடில், வேகத்திற்கு மாறும்போது இன்பத்தின் அளவுக்கு அளவே
இருக்காது... அதற்காக யாரும், யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்பதும்
நினைவிருக்கட்டும்.
சிலருக்கு
அந்த சமயத்தில்,வெட்கம் வரலாம், கூச்சம், தயக்கம் வரலாம். அதையெல்லாம்
தூக்கி கொஞ்ச நேரத்துக்கு கக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். வெளிப்படையாக
இருங்க, எப்படி நடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படி நடந்து
கொள்ளுங்கள்.
சிலருக்கு
அந்த சமயத்தில் ஆபாசமாக பேசத் தோன்றும், அதை சிலர் குறிப்பாக
மனைவிமார்கள் விரும்ப மாட்டார்கள். ஆனால் அப்படிப் பேசுவது உணர்ச்சிகளை
மேலும் தூண்டி, உறவை மேலும் பொலிவாக்கும் என்கிறார்கள் மன நல நிபுணர்கள்.
எனவே ரொம்ப ஓவராக இல்லாத வகையில் ஓரளவுக்கு பேசுவதற்கு கணவர்களை மனைவியர்
அனுமதிக்கலாம்... பலன் உங்களுக்கும்தானே கிடைக்கப் போகிறது!
படுக்கை
அறையில் யார் தொடங்குவது, யார் ஆரம்பிப்பது என்ற பிரச்சினைக்கே இடம்
இருக்கக் கூடாது. யார் தொடங்கினாலும் ஓ.கேதான். நீங்கள் தொடங்கினால்,
அன்றைய உறவுக்கு நீங்கள்தான் 'பாஸ்'. தொடங்கியது முதல் முடிவு வரை உங்களது
பணியை செம்மையாக செய்து முடியுங்கள்.என்றாலும் கூட அமைதியாக ஆரம்பித்து
ஆர்ப்பாட்டமாக முடிப்பதே சாலச் சிறந்தது.
செக்ஸ்
உறவின் போது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி ஒரு விஷயத்தை
மறக்காமல் இருங்கள். அதாவது, உறவின்போது இருவருமே நல்ல துடிப்புடன் இருக்க
வேண்டியது அவசியம். யாராவது ஒருவர் டல்லாகவோ, முனைப்பு காட்டாமலோ
இருந்தால் உறவு பெரும் கசப்பை சந்திக்க நேரிடும். எனவே உறவுக்கு முன்பாகவே
மனதளவிலும், உடல் அளவிலும் பக்கவாக இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம்.
ஒவ்வொரு இரவையும் முதலிரவு போல நினைத்துக் கொண்டு விளக்குகளை அணையுங்கள்... உங்கள் வாழ்க்கையில் என்றுமே பிரகாசம்தான்...!
thanks to thedippar.com
No comments:
Post a Comment